சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் நிறைந்த வருகின்றது அதிலும் குறிப்பாக டிஆர்பில் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களை பிடித்து வருகிறது.
ஏற்கனவே மருமகள் மற்றும் மூன்று முடிச்சு சீரியல் மகா சங்கமம் நடந்த நிலையில் தற்போது மூன்று சீரியல்கள் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாக இருப்பதாக சன் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் கயல்,மருமகள் மற்றும் அன்னம் சீரியல் இணைந்து மெகா சங்கமாக செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பாகும் என்பதை வீடியோ மூலம் ப்ரோமோவாக வெளியிட்டு உள்ளனர்.
இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
