பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடித்து வரும் ‘ஓ மை கோஸ்ட்’ ‘OMG’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
தற்போது சன்னி லியோன் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். நீச்சல் உடையில் ஊஞ்சல் மேல் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் சன்னி லியோன், ‘எனக்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் காலியாக உள்ளது, என்னுடன் ஊஞ்சலாட யார் வருகிறீர்கள்? என்ற கேள்வியையும் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து, கமெண்ட் செய்து வருகிறார்கள்.
No filter needed here!!
.
.
.@sunsiyamresorts@zenasiatravel@asyouplan@puremaldives#SunnyLeone #olhuveli #sunsiyamresorts #sunsiyam#travelwithasyouplan #zenasiatravel pic.twitter.com/IbUX6Kry9L— sunnyleone (@SunnyLeone) September 3, 2021

