Sundhara Travels part 2 coming soon
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. இதுதவிர அஜித்குமாரின் பில்லா, கமலின் விஸ்வரூபம், தனுஷின் வேலை இல்லா பட்டதாரி, விஷாலின் சண்டக்கோழி, சுந்தர் சி-யின் அரண்மனை, விக்ரமின் சாமி உள்ளிட்ட படங்களும் 2 பாகங்களாக வெளிவந்துள்ளன. குறிப்பாக சூர்யாவின் சிங்கம் மற்றும் லாரன்ஸின் காஞ்சனா ஆகிய படங்களுக்கு வரவேற்பு இருந்ததால், தொடர்ச்சியாக 3 பாகங்கள் வெளிவந்தன.
இந்நிலையில், முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், முரளி கதாபாத்திரத்தில் கருணாகரனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தை போன்று இதுவும் நகைச்சுவை நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…