Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரி சீரியல் கதாநாயகி வெளியிட்ட புகைப்படம் குவியும் வாழ்த்து

Sundari Serial Latest Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. நேற்று இந்த சீரியலின் இறுதி கட்ட சூட்டிங் நடந்திருப்பதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கதாநாயகி கேபிரில்லா வெளியிட்டிருந்தார்.

அதில் அனைவரும் கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தனர். டிஆர்பி இல் டாப் 5 இடத்திலிருக்கும் சுந்தரி சீரியலை ஏன் முடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் தற்போது கதாநாயகி கேப்ரில்லா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இதனால்தான் சீரியல் முடிவுக்கு வந்ததா என்ற கேள்வியும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.