Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுந்தரி சீரியலின் இறுதி கட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியிட்ட கேபிரில்லா.!!

sundari serial climax video viral

சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த வாரத்தில் கூட டாப் 10 டிஆர்பிஎல் ஐந்தாவது இடத்தை பிடித்தது சுந்தரி சீரியல் தான்.

ஆனால் சமீபமாக இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

சுந்தரிக்கும் வெற்றிக்கும் திருமணம் நடந்து முடிவது போல இறுதி காட்சி எடுக்கப்பட்டுள்ளது. சீரியல் முடிந்த உடன் அனைவரும் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டுள்ளனர்.

இந்த வீடியோவை சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரில்லா வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.