Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முடியப்போகிறதா சன் டிவி சுந்தரி சீரியல்,வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சுந்தரி. முதல் பாகத்தில் கார்த்திக் சுந்தரியை திருமணம் செய்து கொண்டு அவருக்கே தெரியாமல் அணுவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த விஷயம் அனுவுக்கு தெரிந்து அவருக்கு குழந்தை பிறந்ததும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்ட நிலையில் இரண்டாவது பாகத்தில் கலெக்டர் ஆன சுந்தரி தமிழை தன்னுடைய குழந்தையாக வளர்த்து வந்த நிலையில் கார்த்திக்கின் என்ட்ரியால் இப்போது கதைக்களம் வேற மாதிரி பயணித்து வருகிறது.

இந்த நிலையில் காணாமல் போன அணு மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து விட்டது போல கார்த்தியாக நடித்து வருபவர் instagram பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அணு மற்றும் தமிழுடன் அவர் ஜோடியாக எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தால் சுந்தரி சீரியல் முடிய போகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் காணாமல் போனாலும் எப்படி திரும்பி வருகிறார் தமிழுக்கு சுந்தரி அம்மா இல்லை என தெரிய வந்தால் என்ன நடக்கிறது என்ற கதைகள் இருப்பதால் இந்த சீரியல் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sundar serial latest update viral
Sundar serial latest update viral