தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன சேனலாக இருந்து வருகிறது சன் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.
சன் டிவிக்கு டப் கொடுக்கும் ஒரே சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. சன் டிவி சீரியல்களை காட்டிலும் விஜய் டிவி சீரியல் டிஆர்பி குறைந்த அளவிலேயே காணப்பட்டு வந்தாலும் ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மட்டும் எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி டாப் 10 லிஸ்டில் மூன்றாம் இடத்தை நெருங்கி விட்டது.
எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் மவுசு குறைந்து கொண்டே வருவதால் இந்த வாரத்தோடு மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது. இதனால் எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளிய சிறக்கடிக்க ஆசை சீரியலுக்கு செக்மேட் வைக்கும் விதமாக சன் டிவி அடுத்த கட்ட நகர்வை நகர்த்த உள்ளது.
அதாவது சன் டிவியில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வரும் சிங்க பெண்ணே சீரியல் வரும் திங்கள் முதல் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதனால் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு சிங்க பெண்ணே சீரியல் பெரிய டப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் சிங்கப் பெண்ணே சீரியலின் நேர மாற்றத்தால் ரேட்டிங்கில் அடிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
