தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது சன் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய சிங்க பெண்ணே சீரியலால் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் மல்லி என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இதனால் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி எதிர்நீச்சல் சீரியல் பழையபடி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் இனியா சீரியல் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
