எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்து வந்த நிலையில் அவரது மறைவிற்குப் பிறகு தற்போது வேலராமமூர்த்தி நடித்து வருகிறார்.
மாரிமுத்து அளவிற்கு வேல ராமமூர்த்தியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றால் மாரிமுத்துவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் படி இவர் ஒரு மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து சன் டிவி தரப்பில் இருந்தோ அல்லது வேல ராமமூர்த்தி தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.