Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய சீரியலால் முடிவுக்கு வரும் சந்திரலேகா மெகா தொடர் வைரலாகும் புகைப்படம்..!

sun tv chandralekha serial in fairwell photo

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ஆனால் பெரிய நடிகர்கள் நடிப்பில் ஒளிபரப்பாக தொடங்கினாலும் சில சீரியல்கள் தொடங்கிய வேகத்தில் வரவேற்பை பெறாமல் முடிவுக்கு வந்துவிடுகின்றன.

ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் சந்திரலேகா சீரியலில் ஹீரோயின் கூட மாற்றப்படாமல் மிக நீண்ட நாட்கள் ஒளிபரப்பான சீரியல் என பெயர் எடுத்ததுதான் சந்திரலேகா நெடுந்தொடர். தொடங்கிய நாள் முதல் சன் டிவியில் தினந்தோறும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது.

கிட்டத்தட்ட 2300 எபிசோடுகளை கடந்த சந்திரலேகா தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இப்படியான நிலையில் தற்போது இந்த சந்திரலேகா சீரியல் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் சீரியல் நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

தற்போது இந்த போட்டோ இணையத்தில் வெளியாகி சந்திரலேகா சீரியல் முடிவுக்கு வருவதை முடிவு செய்துள்ளது. இந்த சீரியலுக்கு பதிலாக வரும் திங்கள் முதல் மதியம் 2 மணிக்கு இலக்கியா என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sun tv chandralekha serial in fairwell photo
sun tv chandralekha serial in fairwell photo