Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக போகும் படம் எது தெரியுமா? வெளியான தகவல்

Sun Pictures in Upcoming Release Update

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகி வருகின்றன.

இந்த 2022-ல் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் பிறகு இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனால் மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது.

ஜூலை மாதத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sun Pictures in Upcoming Release Update
Sun Pictures in Upcoming Release Update