Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆலியா பட்டை பாராட்டி பேசிய சுஹானா கான்.வைரலாகும் தகவல்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்ற மகனும் சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர்.

இதில் ஆர்யன் கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இவரது மகள் சுஹானா கான் ஜோயா அக்தர் இயக்கியிருக்கும் ‘ஆர்ச்சீஸ்’ படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் சுற்று சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை சுஹானா கானிடம் நடிகை ஆலியாபட் தேசிய விருது வழங்கும் விழாவில் தனது திருமண உடையை அணிந்திருந்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு சுஹானா, “புதிய உடைகளை தயாரிக்கும் பொழுது எவ்வளவு கழிவுகள் வெளியாகுகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆலியாவின் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக இருந்தது.

ஆலியாவே ஏற்கனவே அணிந்த உடையை உடுத்துகிறார் என்றால் நாமும் பார்ட்டி அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது ஆலியா பட்டை பின்பற்றி ஏற்கனவே அணிந்த உடையை அணியலாம்.” என்று ஆலியாவை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

நடிகை ஆலியா பட் ‘கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suhana Khan about Alia Bhatt
Suhana Khan about Alia Bhatt