குடல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வீட்டு மருத்துவத்தின் மூலம் சரிப்படுத்தலாம்.
இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்க வழக்கங்களால் பல பிரச்சனைகளை சந்திக்கின்றன. குறிப்பாக அதில் ஒன்று குடல் புண் பிரச்சனை.
குடல் புண் பிரச்சனை வந்தால் சில வீட்டு வைத்தியங்கள் வைத்து குணப்படுத்த இயலும். அதனைக் குறித்து தெளிவாக பார்க்கலாம்.
குடல் புண் பிரச்சனை இருப்பவர்களுக்கு தேன் ஒரு நிவாரண மாக உள்ளது. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் குடித்து வர வேண்டும். இது வயிறு எரிச்சல் பிரச்சனையையும் சரியாக்கும். அகத்திக் கீரையை வேக வைத்து சாறு பிழிந்து அதில் தேன் கலந்து குடித்து வரவேண்டும். வயிற்றில் உள்ள புண்கள் குணமாக ஆலமரத்திலிருந்து வரும் பாலை ஒரு ஸ்பூன் தேனுடன் சேர்ந்து குடிக்க வேண்டும்.
மேலும் கை, கால் மற்றும் உடல் நடுக்கத்திற்கு ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் குப்பைமேனி செடியின் வேரை எடுத்து அதனை கஷாயமாக்கி வடிகட்டி பிறகு சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும்.
எனவே இயற்கையான முறையில் குடல் புண் பிரச்சனையை தவிர்க்கலாம்.