sudha-kongara-post-goes-viral
2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றார். மாதவனுக்கு விருந்தளித்த சுதா கொங்கரா தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. இவருக்கு சமீபத்தில் கையில் காயம் ஏற்பட்டு ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் மாதவனுக்கு ஒன்பது வகையான உணவுடன் விருந்தளித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதற்கு சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் மாதவன் நடிக்கவுள்ளாரா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…