தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் என எக்கச் சக்கமான நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல்வேறு மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.
இந்த நிலையில் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் சுதா கொங்கரா இந்த படம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என இதுவரை படம் பார்த்தவர்கள் எல்லோரும் கூறுகின்றனர். நான் இன்னும் படம் பார்க்கவில்லை விரைவில் படத்தை பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இவருடைய இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
