Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்புவின் STR 49: கல்லூரி கால நினைவுகளுடன் சந்தானம் கூட்டணி! பூஜையுடன் கோலாகல ஆரம்பம்!

str 49 movie pooja update

நடிகர் சிலம்பரசன் TR நடிக்கும் புதிய திரைப்படமான #STR49 இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கியது. Dawn Pictures சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்தை, ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

#STR49 திரைப்படம், ரசிகர்களை மீண்டும் விண்டேஜ் சிம்புவை காணும் வகையில், கல்லூரி பின்னணியில் உருவாகும் ஒரு கலகலப்பான கமர்ஷியல் படமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், ‘பார்க்கிங்’ படத்தில் காட்டிய மாறுபட்ட கதைக்களத்தை தொடர்ந்து, இந்த முறை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் ஒரு கமர்ஷியல் விருந்தை படைக்கவுள்ளார்.

இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சந்தானம் சிம்புவுடன் இணைந்து நடிக்க இருப்பது. இவர்களுடன், இளைஞர்களின் மனதை கவர்ந்த நாயகி கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

பல முன்னணி நட்சத்திரங்களின் பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் Dawn Pictures சார்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இந்த #STR49 திரைப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவையும், சாய் அபயங்கர் இசையையும், சுபேந்தர் PL கலை இயக்கத்தையும் கவனிக்கவுள்ளனர். பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பாளராகவும், கபிலன் செல்லையா விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர். வீர சங்கர் நிர்வாக தயாரிப்பாளராகவும், மனோஜ் மேடி மக்கள் தொடர்பாளராகவும் செயல்படவுள்ளனர். சிம்பு, சந்தானம் கூட்டணி மீண்டும் இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது. கல்லூரி பின்னணியில் உருவாகும் இந்த கமர்ஷியல் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என நம்பலாம்.

str 49 movie pooja update