Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரம் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

Storyline of Kamal Haasan in Vikram Movie

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படத்தின் பிரமோஷன் வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் படத்தின் கதை குறித்து தகவல் இன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது விஜய் சேதுபதி ஒரு குற்றத்திற்காக ஜெயிலில் இருக்க அவரை வெளியே கொண்டுவர பகத் பாசிலுக்கு பாஸ்க் கொடுக்கப்பட அவரும் அந்த ஜெயிலுக்கு செல்கிறார். இவர்கள் இருவரின் திட்டத்தை முறியடிக்க கமல்ஹாசனும் இதே ஜெயிலுக்கு செல்கிறார். அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக அதிகம் மெனக் கெட்டு எடுத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Storyline of Kamal Haasan in Vikram Movie
Storyline of Kamal Haasan in Vikram Movie