Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அழகிய ஆண் குழந்தைக்கு அம்மாவானா ஸ்ருதி … நகுல் வெளியிட்ட வீடியோ

sruthi blessed boy baby

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் பின்னணி பாடகர் போன்ற பன்முக திறமைகளை கொண்டுள்ளவர் தான் நகுல். இவர் மாபெரும் இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானார். இதில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து உடல் எடையை குறைத்த பின் கதாநாயகனாக காலில் விழுந்தேன், மாசிலாமணி போன்று வரிசையாக சில படங்கள் நடித்திருந்தார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆர். கண்ணன் இயக்கத்தில் ‘எரியும் கண்ணாடி’மற்றும் ஆர். ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் வாஸ்கோடகாமா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நகுல் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஸ்ருதி பாஸ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ‘அகிரா’ என்று ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் மீண்டும் கருத்தரித்திருந்த நகுலின் மனைவி நிறைமாதமாக இருக்கும்பொழுது எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை நகுல் அவரது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது அவர்களுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற அந்தச்செய்தியை வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதியருக்கு அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sruti Nakul (@srubee)