தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மோதலும் காதலும். இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
விக்ரமின் அக்காவாக நடித்து வருகிறார் ஸ்ரீதேவி அசோக்குமார். தற்போது இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் விரைவில் சீரியலில் இருந்து வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இனி இந்த சீரியலில் இவருக்கு பதிலாக தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் புகழ் கிருத்திகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இவருக்கு பதில் இவர் என்ற டைட்டில் கார்டு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
