Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரமிற்காக பொன்னியின் செல்வன் படக்குழு செய்த வேலை.. வைரலாகும் வீடியோ

special-video-for-vikram ponniyin selvan team

இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கி இருக்கும் மாபெரும் படைப்புதான் பொன்னியின் செல்வன் -1. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் நடிகர் விக்ரமால் கலந்து கொள்ள முடியவில்லை.

அதனால் பொன்னியின் செல்வன் படக்குழு நடிகர் விக்ரம்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை இன்று மாலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விக்ரம் இப்படம் வெளியாக இருக்கும் ஐந்து மொழிகளிலும் மிகவும் தெளிவான உச்சரிப்போடு அவரே டப்பிங் பேசியுள்ளார். இந்த அசத்தலான வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதனை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.