Special update released by the maanaadu film crew
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
இந்நிலையில், மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…
திருமணத்திற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவி தொகை விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த…
சாய் அபயங்கரின் அடுத்த பாடிய 'பவழமல்லி' பாடல் வைரல் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள்…
சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’…
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…