Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு போஸ்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த பிசாசு 2 பட குழு.. வைரலாகும் போஸ்டர்

special-poster-from-pisasu2

பிசாசு படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் தற்போது இயக்கியிருக்கும் படம் தான் “பிசாசு 2”. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் நமது இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இப்படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

special-poster-from-pisasu2
special-poster-from-pisasu2