Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சோனியா அகர்வால் மற்றும் எஸ்பிபி சரணுக்கும் திருமணம் குறித்து வெளியான தகவல்.. உண்மையை உடைத்த எஸ்பிபி சரண்

spb-charan-with-sonia-agarwal photo

இந்தியத் திரையுலகின் பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம். பல மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ள இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருடைய ஒரே மகன் தான் எஸ்பிபி சரண். பின்னணி பாடகரான இவரும் தொடர்ந்து பல படங்களில் பாடி வருவது மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இதனிடையில் இவரும் சோனியா அகர்வால் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக இருவருக்கும் திருமணம் என பேசப்பட்டு வந்தது. ரசிகர்கள் பலர் எஸ்பிபி சரண் மற்றும் சோனியா அகர்வால் என இருவருக்கும் வாழ்த்து தெரிவிக்க எஸ்பிபி சரண் இது ஒரு வெப்சிரீஸ் தொடர். இதில் தன்னுடன் சோனியா அகர்வால் அஞ்சலி கொக்கு வித் கோமாளி சந்தோஷ் பிரதப் உள்ளிட்டோர் நடிப்பதாக போஸ்டருடன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தனக்கும் சோனியா அகர்வாலுக்கும் திருமணம் என பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.