பிக் பாஸ் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சௌந்தர்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் தற்போது எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர்.
தற்போது சௌந்தர்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவரது பிறந்த நாளை பிக் பாஸ் நண்பர்களான பவித்ரா, ஜாக்லின், ராயன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படத்தை ஜாக்லின் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சௌந்தர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram