soppanasundari movie-shoot-wrapped
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகைகள் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் கவனித்து கொள்ள பாடல்களை அஜ்மல் இசையமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் இயக்கியிருக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…
கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…
கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…
ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…
'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…