தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூரி. ஆரம்ப காலகட்டத்தில் காமெடியனாக தனது பயணத்தை மேற்கொண்ட இவர் தனது தனித்துவமான காமெடியால் பல உச்ச நட்சத்திரங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.
அதையாடுத்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருந்த விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கும் சூரி இப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பலராலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் வெளியிட்டு இருக்கும் பதிவை கண்டு நெகிழ்ச்சி அடைந்த சூரி அதற்கு ரீ-ட்வீட் செய்து இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
அதாவது ரசிகர் ஒருவர், நடிகர் சூரியின் திரை பயணத்தை விளக்கும் வகையில் காமெடியனாக இருந்த சூரிக்கு விடுதலை திரைப்படத்தின் ஹீரோ சூரி நம்பிக்கையூட்டுவது போல போட்டோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த சூரி அருமையாக இருப்பதாக குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
Fantastic work brother ????❤️ https://t.co/lRynupPt2p
— Actor Soori (@sooriofficial) April 25, 2023