இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருடன்’. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘கருடன்’ படத்திற்கு ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கருடன்’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் சூரி இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை சூரி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சூரி ஆவேசமாக பேசும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…