சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி கை கழுவ போக அங்கிருந்த நபர் நந்தினி பின்னாலே சென்று பக்கத்தில் நின்று கை கழுவ தண்ணி ஊற்ற சொல்லுகிறார் உடனே பக்கத்தில் வர நந்தினி கன்னத்தில் அரைகிறார். உடனே கோபத்தில் அவன் மீண்டும் நந்தினியை அடிக்க வர சூர்யா தடுத்து நிறுத்தி அவனை அடி வெளுத்து வாங்குகிறார். அவனது ஆட்கள் ஒவ்வொருவராக வர அனைவரையும் சூர்யா அடிக்கிறார் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வந்து தடுத்து நிறுத்துகின்றனர். சூர்யாவை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துப் போக நந்தினி வெளி பக்கமாகவே இருக்க சூர்யா நடந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்லிக் கொண்டிருக்க நந்தினி உள்ளே வராததை கவனித்த சூர்யா வந்து பார்க்க நந்தினி பின்னால் இல்லாமல் இருக்கிறார். ஹோட்டல் முழுவதும் சூர்யா தேடியும் நந்தினி கிடைக்காமல் இருக்க அந்த லாரியில் நந்தினி கடத்திச் சென்று விடுகின்றனர். ஜிபிலிருந்த நால்வரும் வந்து உட்கார எங்கடா என் பொண்டாட்டி என்று சண்டை போட உங்க பொண்டாட்டி கிட்ட வம்பு இழுத்தேன் அதுக்கு தான் அடிச்சிட்டீங்க இல்ல எங்களுக்கு தெரியாது என்று சொல்லுகிறார். பிறகு லாரியில் வந்தவர்கள் தான் நந்தினி கடத்திச் சென்று இருக்கின்றனர். சூர்யா சிசிடிவி புட்டேஜ் கேட்க பத்து நிமிஷம் புட்டேஜ் மட்டும் காட்ட மாட்டேங்குது என்று சொன்னவுடன் அங்கு இருந்த லாரி நம்பரை சூர்யா வாங்கிக்கொண்டு நந்தினியை தேடிச் செல்கிறார்.

அருணாச்சலம் சூர்யாவிற்கு ஃபோன் போட்டு அரை மணி நேரம் ஆயிடுச்சு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தெல்லாம் என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிடுகிறார். சூர்யாவும் வந்துவிட லாரி நம்பரை காண்பிக்க இதை எல்லாருக்கும் அனுப்பி சீக்கிரம் தேடி கண்டுபிடித்துவிடலாம் என்று சொல்லுகிறார். அவளுக்காக இவங்க துடிக்கிறத பாத்தா கடுப்பா இருக்கு என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். நம்ம கிளம்பலாமா என்று மாதவி கேட்ட, உங்கப்பா வந்துட்டும் என்று சொல்லுகிறார் மறுபக்கம் ஜிப்பில் இருப்பவர்களும் லாரியில் இருப்பவர்களும் சேர்ந்துதான் நந்தினியை கடத்தி எடுத்துக்கொண்டு வந்து அடைத்து வைக்கின்றனர். அருணாச்சலம் வந்த உடன் கிளம்பலாமா என்று சுந்தரவல்லி சொல்ல, நந்தினிக்கு என்ன ஆச்சோ என்று நாங்கள் பதறி போயிருக்க உங்களுக்கு இரக்கமே இல்லையா என்று கேட்கிறார். கண்டவங்களுக்காக என்னால வெயிட் பண்ண முடியாது என்று சொல்ல என் பொண்டாட்டி கண்டவளா என்று சூர்யா கேட்கிறார். ஒருவேளை மாதவியும் சுரேகாவோ காணாமல் போயிருந்தா இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவாங்களா என்று கேட்கிறார்.

இப்போ நீங்க வரப் போறீங்களா இல்லையா நாளைக்கு நம்மளோட 30 ஆவது கல்யாண நாள் அதற்கான ஏற்பாடுகள் போய் செய்யனும் என்று சொல்ல, நான் சொன்னப்ப வேணான்னு சொல்லிட்டு இப்ப மட்டும் இப்படி பேசுறாங்க என்று சொல்ல அது என்னோட இஷ்டம் என்று சொல்லி அருணாச்சலத்தை வீட்டுக்கு கூப்பிட அவர் நந்தினி வராமல் வரமாட்டேன் என்று சொல்லிவிட சுந்தரவல்லி மாதவி அசோகன் மூவரும் கிளம்பி விடுகின்றனர். சூர்யாவும் அருணாச்சலம் வெளியில் காத்துக் கொண்டிருக்க போலீஸ் அவர்களைப் கூப்பிட்டு டூவீலர் நம்பர தப்பா கொடுத்திருக்காங்க கண்டிப்பா அந்த லாரியை அடையாளத்தை வச்சு கண்டுபிடிக்க பார்க்கலாம் என்று சொல்ல சூர்யா பயப்படுகிறார். என்ன செய்வது என தெரியாமல் சூர்யா கண்கலங்க,அருணாச்சலம் ஆறுதல் சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி இடம் வம்பு இழுத்து பேசுகின்றனர். நந்தினி பயப்படாமல் தைரியமாக பேச உன்ன மாதிரி ஒரு பொண்ணு ராங்கி புடிச்சிட்டு இருந்தா அவளை என்ன பண்ண போறோம் என்று பாரு என்று சொல்லி கீழே ஐஸ் கட்டியை வைத்து அதற்கு மேல் தூக்கு கயிறு மாட்டி அந்த பெண்ணை அதன் மேல் நிற்க வைத்து கழுத்தில் கயிறு மாட்ட என்னடா பண்றீங்க அந்த பொண்ணு பாவம் விடுங்கடா என்று நந்தினி சொல்லுகிறார்.

அந்த ஐஸ் உருக உருக அவளுக்கு நரகம் கண்ணில் தெரியும் நீயே பாரு என்று சொல்லி நிற்கவைக்கின்றனர். நந்தினி அவர்களிடம் விடச் சொல்லி வாக்குவாதம் செய்ய அடுத்த ஐஸ் கட்டி உனக்கு தான் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுரேகா வீட்டில் இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்க அவர்கள் வந்து விடுகின்றனர். சுரேகா பேச வர உடனே சுந்தரவல்லி கோபமாக சென்றுவிட அசோகன் நந்தினி காணாமல் போன விஷயத்தை சொல்லுகிறார். ஒருவேளை வெட்டிங் டேவை ஸ்பாயில் பண்ண கூட நந்தினி இப்படி பண்ணியிருப்பா என்று சொல்ல இவளை தேடுவதே ஒரு வேலையா இருக்கும் போல என்று சொல்லி சுந்தரவல்லி இடம் பேச வருகின்றனர். உடனே அருணாச்சலத்தைப் பற்றி சுந்தரவளியிடம் சொல்லி ஏத்தி விடுகிறார். கல்யாண நாளில் நீங்க தனியா இருந்தா அவமானமா இருக்கும் என்று சுரேகா சொல்லுகிறார்.அவரு எப்படி வராமல் போவாருன்னு நான் பாக்குறேன் கண்டிப்பா அவரு வருவாரு நீயும் மாப்பிள்ளையும் ஏற்பாடுகளை பிரம்மாண்டமா செய்ங்க கல்யாண நாள் மாதிரி இருக்கக்கூடாது கல்யாண மாதிரி இருக்கணும் என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். ரூமுக்கு வந்த சுந்தரவல்லி அருணாச்சலத்திற்கு போன் போட்டு இப்ப நீங்க வீட்டுக்கு வர போறீங்களா இல்லையா என்று கோபமாக கேட்கிறார்.

சூர்யாக்கு கஷ்டப்பட்டு இருக்கும் போது என்னால எப்படி வர முடியும் என்று சொல்ல கல்யாண நாள் ரொம்ப முக்கியம் நீங்க வந்து தான் ஆகணும் என்று சொல்லுகிறார். அவ பொறுப்பில்லாமல் சுத்திகிட்டு இருந்ததுக்கெல்லாம் நம்ம காரணமாய் இருக்க முடியாது சூர்யா அவன் பொண்டாட்டிய காணோம்னு துடிச்சுக்கிட்டு இருக்கான் இங்க உங்க பொண்டாட்டி கத்திக்கிட்டு இருக்கேன் உங்களுக்கு அத பத்தி கவலை இல்லையா நீங்க வந்தே ஆகணும் நாளைக்கு காலையில நீங்க இங்க வரலனா வருஷம் ஃபுல்லா கொண்டாட வேண்டிய கல்யாண நாள் என்னோட நினைவு நாள் ஆகிவிடும் என்று சொல்லி போனை வைக்க, பதட்டப்பட்ட அருணாச்சலத்தை சூர்யா சமாதானப்படுத்தி வாங்க நான் உங்க வீட்டுல டிராப் பண்றேன்னு என்று சொல்லி அழைத்து வர, மறுபக்கம் ஐஸ் கட்டி உருகி கொண்டே இருக்க நந்தினி பதறுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அருணாச்சலத்திடம் தாய்குலம் சொல்றது செய்ற ஆளு ஏதாவது நடந்தால் நீங்க தான் காலம் ஃபுல்லா குற்ற உணர்ச்சியில் இருக்கணும் என்று சொல்லுகிறார் பிறகு அருணாச்சலத்தை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட சுந்தரவல்லி இடம் சூர்யா இந்த வெட்டிங் டே நந்தினி இல்லன்னு உங்க பொண்டாட்டி ரொம்ப சந்தோஷப்பட வேணான்னு சொல்லுங்க ஃபங்க்ஷனுக்கு ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி கண்டிப்பா என் பொண்டாட்டி கூட்டிட்டு வந்துருவேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் சுந்தரவல்லி சொன்ன மாதிரி நந்தினி வருவா ஒரு சீட்லயோ வரமாட்டானு ஒரு சீட்லயும் எழுதி இருக்கேன் சாமியே முடிவு பண்ணட்டும் என்று சொல்லி சூர்யா சீட்டை எடுத்துப் பார்த்து அதிர்ச்சையாகிறார். என்ன நடக்கப் போகிறது என்று சொல்வது தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

I,Nobody Release Teaser

I,Nobody Release Teaser Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer|Jakes Bejoy

11 hours ago

Arulvaan Official Trailer

Arulvaan Official Trailer | Arulnidhi, Aarav, Ramya Pandian | G.V. Prakash Kumar | Tamil Trailer

11 hours ago

Malligai Mottu Promo Song

Malligai Mottu Promo Song | Mr.Bhaarath | Niranjan | Pranav Muniraj | Samyuktha | Lokesh…

11 hours ago

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

17 hours ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

17 hours ago

மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…

17 hours ago