தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயற்றியுள்ளார்.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயல்பு நிலை திரும்ப காரணத்தினால் அமேசான் பிரைம் வீடியோ வில் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கான வியாபாரங்களும் நடந்து முடிந்துள்ளன. படத்தின் ரிலீஸுக்கு முன்னரே சூரரைப்போற்று திரைப்படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் சூர்யா சூரரைப்போற்று ரிலீஸ் மூலமாக கிடைக்கும் தொகையில் 5 கோடி நலத் திட்டங்களுக்காக செலவிடப்படும் என அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது ரூபாய் 1.5 கோடி சினிமா துறை சார்ந்த சங்கங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
அதாவது இந்த ரூபாய்க்கு 1.5 கோடியில் ரூபாய் ஒரு கோடியை பெப்சி தொழிலாளர்களுக்கு அளித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூபாய் 30 லட்சம் நிதியாக வழங்கியுள்ளார்.
மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிதியாக வழங்கியுள்ளார். சூர்யாவின் இந்தச் செயலையும் சூரரைப்போற்று திரைப்படம் ரிலீசுக்கு முன்பாக 100 கோடி வசூலித்ததால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இதன் காரணமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் #SooraraiPottruHits100crPB என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…