தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர் தமிழில் கைதி, புரியாத புதிர் ,விக்ரம் வேதா ,அடங்க மறு, நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பாடல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி உள்ளார்.
அதாவது ஒரு நல்ல பாடல் என்பது அனைத்து வயது குழுவினராலும் விரும்பப்பட வேண்டும். இந்த தலைமுறை இளைஞர்கள் மட்டும் விரும்பி அவர்களது பெற்றோர் விரும்பவில்லை என்றால் அது என்ன வகையான இசை என்று எனக்கு தெரியவில்லை எம்.எஸ்.வி சார் மற்றும் இளையராஜா சார் ,ஏ ஆர் ரகுமான் சார் ஆகியோரின் இசை அனைத்து தலைமுறையினராலும் விரும்பப்படுகிறது.
நான் என்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்துக் கொள்ள விரும்பவில்லை எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது பெரிய கதாநாயகர்கள் முதல் சிறிய கதாநாயகர்கள் வரை என்னால் இசையமைக்க முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் விரைவில் அஜித் சாருக்காக இசையமைக்க போகிறேன் என்றும் நானும் அவரை போலவே ஒன்றும் இல்லாத நிலையில் இருந்து வந்ததால் நான் அவருடைய ஒரு பெரிய ரசிகன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தளபதி விஜய் உடன் பணியாற்ற விரும்புவதாகவும் ஆனால் அவர் மீண்டும் நடிப்பாரா என்று எனக்கு தெரியவில்லை அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


