தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் CV குமார் தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்து இருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக சிவா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதன் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here is the motion poster of #SoodhuKavvum2: Naadum Naatu Makkalum #சூதுகவ்வும்2: நாடும் நாட்டு மக்களும்https://t.co/BwdXLVrS12
The God of Lord is coming soon???? With The Gang ???? With New Rules ! @icvkumar @Dir_Arjun @actorshiva #Karunakaran @ThirukumaranEnt @dopkthillai pic.twitter.com/Qo9ELDkdP2
— C V Kumar (@icvkumar) May 1, 2023

