Sonu Sood continues to help ... the public anointed Paul with cut-out
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார்.
தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெசேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அவர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவி வருகிறார் சோனு சூட்.
இந்நிலையில் சோனுசூட்டின் மனித நேயத்தப் பாராட்டி ஆந்திர மாநிலம் சித்தூரில் சோனு சூட்டின் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கியுள்ளனர். அதோடு, பொதுமக்களுக்கு உணவையும் வழங்கி ‘நாங்கள் இனிமேல் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவை செய்யவிருக்கிறோம். சோனு சூட்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்’ என்றும் தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…