Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு படத்தின் மொத்த பாடல் எத்தனை தெரியுமா.? வெளியான ட்ராக் லிஸ்ட் இதோ.!

song track list to vendhu thanindhadhu kadu movie

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில்  இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும்இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிட்டியில்  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் கலந்து கொண்டனர்.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்களுக்கான டிராக் லிஸ்ட் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் 5 பாடல்களுக்கும் எழுத்தாளர் தாமரை வரிகளை எழுதி இருக்கிறார். இந்த ட்ரக் லிஸ்ட் போஸ்டர் தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

song track list to vendhu thanindhadhu kadu movie
song track list to vendhu thanindhadhu kadu movie