Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விருமன் பட குழு செய்த செயலால் வருத்தத்தில் சினேகன்

snehan-talk-about-viruman movie audio-launch

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் கார்த்திக் நடித்திருக்கும் திரைப்படம் தான் “விருமன்”. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகளான அதிதி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக மதுரையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் பணியாற்றிய அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

ஆனால் இந்நிகழ்ச்சிக்கு பாடல் ஆசிரியர்கள் யாருக்கும் தகவல் கூட சொல்லாமல் இந்நிகழ்ச்சியை நடத்திய உள்ளதாக பிரபல பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் பேசியது என்னவென்றால் சமீபத்தில் ஒரு பெரிய படம் மதுரையில விருமன் ரிலீஸ் பண்ணாங்க அதற்கு பாடலாசிரியர்களுக்கு ஒரு தகவல் கூட கொடுக்காமல் பாடல் வெளியீட்டு விழா நடந்திருக்கிறது ஒரு பக்கம் வருத்தம் ஒரு பக்கம் ஒரு சீன் நடிச்சவங்கள கூட மேடையில ஏத்துறாங்க ஆனா அந்தப் பாடலுக்கான அங்கீகாரம் பெற்ற யாரையுமே மேடையில ஏத்த மறுக்குறாங்க அது ஏன்னு தெரியல.

ஏன்னா இப்ப நிறைய இடத்துல பாடல் ஆசிரியர்களுக்கான மரியாதையை குறைந்து விட்டு வருது. ஏன்னா இப்ப எல்லா பேரும் எல்லா வேலையும் பார்க்கலாம்னு போது பாடலாசிரியர்களுக்கான இனம் 10 வருஷம் கழிச்சு இருக்கும் மானே தெரியல ஏன்னா அப்படி போயிடுச்சு. இப்ப எப்படி புரொடியூசர்காக வக்காலத்து வாங்கி அண்ணன் ராஜன் அவர்கள் தன்னோட ஆதங்கத்தை சொன்னாரோ அதேபோல் தான் நானும்.

நான் வந்து வளர்ந்து வந்த காலத்தில் பேரெடுக்கும் போது பேர் எடுக்காத புது பாடலாசிரியர்களுக்கு மேடையில நாற்காலி போட மாட்டாங்க எனக்கு மட்டும் போடுவாங்க எத்தனையோ மேடைகளில் அவங்களுக்கு நாற்காலி போட்டீங்கன்னா தான் நான் மேடையில் உட்கார்ந்து இருப்பேன் இல்லையென்றால் நானும் கீழே இருக்கிறேன் என்று இறங்கி இருக்கேன் ஏன்னா எனக்கு மட்டும் இல்ல இந்த படத்துல டீ கொடுக்கிறவங்களுக்கும் தட்டு கழுவுறவங்களுக்கும் கூட ஒரு அங்கீகாரத்தை கொடுக்கணும். ஏன்னா எல்லாரும் அங்கீகாரத்தை நோக்கி தான் திரைத்துறைக்கு ஓடி வராங்க என்று மிகவும் வருத்தத்துடன் பேட்டியில் உரையாடி இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சூர்யா ஏன் இப்படி செய்தார் என்று தங்களது கருத்துக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகிறது.

 snehan-talk-about-viruman movie audio-launch

snehan-talk-about-viruman movie audio-launch