தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தைக்கு அம்மாவான பின்னரும் படங்களில் நாயகியாக நடித்தார். இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்னர் தனுஷுக்கு ஜோடியாக பட்டாசு படத்தில் நடித்தார்.
தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் படங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் சினேகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது.
இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த வயசிலும் இவ்வளவு அழகா என ரசிகர்கள் வாயடைத்துப்போய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram