தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அயலான், மாவீரன் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் “எஸ் கே 21” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி எஸ்கே 21 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருப்பதாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி முதல்முறையாக இணைவதால் இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதுடன் இந்த தகவலை உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.
Welcome onboard @gvprakash for mission #SK21#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21JoiningForces #RKFIProductionNo_51
@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh pic.twitter.com/FcXKff98jS— Raaj Kamal Films International (@RKFI) May 3, 2023