தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பரத் சங்கர் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதாவது பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘1947 ஆகஸ்ட் 16’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள இருக்கிறார். அதனால் இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
Super ???? @Siva_Kartikeyan will be the chief guest for the #1947AUGUST16 audio launch tomorrow evening.
Expecting the official confirmation about the SK – ARM combo ???? pic.twitter.com/63wZFgJkF9
— Siddarth Srinivas (@sidhuwrites) March 26, 2023

