எஸ்.கே 26 படம் குறித்து அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக தயாராக இருப்பதாகவும் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எஸ்.கே 26 படத்தில் நடிக்கப் போவது உறுதியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே எஸ்.கே 24 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கிய பிறகுதான் வெங்கட் பிரபு எஸ்.கே26 படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது சிபிச் சக்கரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்கப் போவதனால் முதலில் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் இணையும் எஸ்கே 26 படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


