Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எஸ் கே 21 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரல்

sk-21-shooting-spot-photo

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராணுவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் SK21 என்னும் தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வரும் நிலையில் இப்படத்தின் மற்றொரு தயாரிப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் தரப்பில் இருந்து இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.