SJ Surya to form alliance with Pushkar - Gayathri
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கைவசம் மாநாடு, டான், பொம்மை, கடமையை செய், இறவாக்காலம் போன்ற படங்கள் உள்ளன. இவற்றுள் மாநாடு, பொம்மை போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதனிடையே எஸ்.ஜே.சூர்யா புதிதாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், அந்த வெப் தொடரை ‘கொலைகாரன்’ படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ளதாகவும் அண்மையில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா – ஆண்ட்ரூ லூயிஸ் கூட்டணியில் உருவாகும் இந்த வெப் தொடரை ‘விக்ரம் வேதா’ பட பிரபலம் புஷ்கர் – காயத்ரி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் ஏற்கனவே சமுத்திரகனி நடிப்பில் வெளியான ‘ஏலே’ படத்தை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…