கருவேப்பிலையை சாப்பிடுவதனால் ஆறு அற்புத பயன்கள் கிடைக்கிறது.
அன்றாடம் சமைக்கும் உணவுகளில் வாசனை மற்றும் சுவை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கறிவேப்பிலை. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இதனை காலையில் வெறும் வயிற்றில் நாளிலிருந்து ஐந்து இலைகளை மென்று சாப்பிட்டு வர வேண்டும்.
மாலைக்கண் நோய் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு கருவேப்பிலையை சாப்பிட்டால் மிகவும் நல்லது.
மேலும் மலச்சிக்கல் வயிற்றுப் பிரச்சனை அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு கருவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வருவது நல்லது.
இது மட்டும் இல்லாமல் தொப்பையை குறைத்து உடல் அதிகரிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.