Sivakarthikeyan's 'Parasakthi' release date suddenly changed.. Unexpected twist!
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்.. எதிர்பாராத ட்விஸ்ட் !
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ வெற்றிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்துள்ளதால், திரையில் அவரைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
மேலும், இப்படத்தில் அதர்வா, ராணா, ஸ்ரீலீலா மற்றும் பாசில் ஜோசப் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படமாகவும் ‘பராசக்தி’ உருவாகியுள்ளது.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவது சிங்கிளும் ரிலீசாக உள்ளது. மேலும், ‘பராசக்தி’ இசை வெளியீடு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளும் நடைபெறுகின்றன.
அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-நதேதியும், பராசக்தி 4-ந்தேதியும் ரிலீஸாகிறது.
இந்நிலையில் ஜனவரி 14-ந்தேதி தெலுங்கில் பெரிய ஹீரோக்களின் மூன்று படங்கள் வெளியாக இருப்பதால், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பராசக்திக்கு அதிகமான திரைகள் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால், ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஜனவரி 9 அல்லது 10-ந்தேதி இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் விஜய்யின் ஜனநாயகனுடன் ‘பராசக்தி’ மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் சரியான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ படத்தில் கேமியோ ரோலில் வந்த எஸ்கே, கையில் விஜய் துப்பாக்கியை கொடுத்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் அவருடைய ஜனநாயகனுடன், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ரிலீசாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…