Sivakarthikeyan to form alliance with D.Imman again
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
அதேபோல் அயலான் படமும் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் அசோக் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
மேலும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…