sivakarthikeyan-record-on-don
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொகுப்பாளராக தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கிய இவர் அதன் பின்னர் காமெடி நடிகராக திரையுலகில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
இவரது நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான டான் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் கிட்டத்தட்ட ரூபாய் 130 கோடி வரை வசூல் செய்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி அறிமுக இயக்குனர் என்பது தான்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்து 130 கோடி வசூலை பெற்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தது அனைவர் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனின் இந்த சாதனை மற்றும் நடிகர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…