Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதை தேர்வில் கவனமாக இருப்பதற்கு காரணம் இதுதான்: சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் படத்தின் ப்ரொமோஷனுக்காக சிவகார்த்திகேயன் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில் பேட்டி ஒன்றில் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் 18 பிளஸ் படங்களில் மட்டும் நடிக்க மாட்டேன். என்னுடைய திரைப்படம் எப்போதும் எல்லோரும் பார்க்கும் படியாக மட்டுமே இருக்க வேண்டும். அதற்காகவே கதை தேர்வில் மிக கவனமாக இருந்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் இவ்வாறு கூறியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Siva Karthikeyan Latest speech viral
Siva Karthikeyan Latest speech viral