தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
அதன் பின்னர் அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அடிக்கடி சிறுத்தை சிவாவின் பெயர் அடி பட்டு வந்தது.
இப்படியான நிலையில் பேட்டி ஒன்றில் இது குறித்து அவரிடம் கேட்கையில் அதை அஜித் சாரே அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
இதனால் அஜித்தின் 63வது படத்தை சிறுத்தை சிவா தான் இயக்கப் போகிறார் என ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
