ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.சைரன் போஸ்டர்இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சைரன்’ திரைப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
. @actor_jayamravi coming out on parole this Feb16th ! ????#SirenFromFeb16 #Tamil & #Telugu
A @gvprakash Musical @antonybhagyaraj @anupamahere @sujataa_HMM @iYogiBabu @IamChandini_12
@AntonyLRuben @brindagopal @dhilipaction @selvakumarskdop @SaktheeArtDir @shiyamjack… pic.twitter.com/Au67K5Vo3F— Keerthy Suresh (@KeerthyOfficial) January 22, 2024

