விஜயாவை அடக்கிய முத்து. சந்தோஷத்தில் மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா ரவி மற்றும் முத்துக்கு தோசை ஊற்றி கொடுக்க அப்போது சட்னி சூப்பர் என ரவி மீனாவை பாராட்டுகிறார்.

முத்து ஹோட்டல் வேலையெல்லாம் எப்படி போகுது என்று விசாரித்து பிறகு ஒரு நாள் நானும் மீனாவும் உன் ஹோட்டலுக்கு சாப்பிட வரோம் என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக மீனா எப்ப புதுசா ஓட்டல் ஸ்டார்ட் பண்ண போறீங்க என்று கேட்க அதற்கு இன்னும் ஒரு ஆறு மாசம் ஆகும் என்று ரவி செல்கிறார். முத்து பணம் அதிகமா தேவைப்படும்ல என்று கேட்க ஆமா லோனுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் என்று சொல்கிறார்.

அப்பா பென்ஷன் பணம் மட்டும் இருந்தா நீ யார்கிட்டயும் கேட்க வேண்டியது இல்லை, ஆனால் ஒருத்தன் மொத்தமா தூக்கிட்டு போய் அவனுக்கும் பிரயோஜனம் இல்லாம ஒரு பொண்ணு கிட்ட ஏமாந்து போய் நிக்கிறான் என்று சொல்ல உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் மனோஜ் திருதிருவென முழிக்கிறார். அடுத்ததாக அங்கு வரும் விஜயா மனோஜ் நீ சாப்பிடலையா என்று கேட்டு கூட்டிட்டு போய் உட்கார வைத்து மீனாவை தோசை அல்ல முத்து அவனுக்காக நீ எதையும் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கேன் என மீனாவை தடுக்கிறார்.

விஜயா அவன் கார் டிரைவர் தானே எப்ப போனாலும் கார் அங்கேயே தான் இருக்கும் ஆனால் என் புள்ளை பெரிய ஆபிஸ்ல பெரிய ஆஃபீஸ்ல பெரிய வேலையில இருக்கான் இன்று ஏளனமாக பேச முத்து பதிலடி கொடுத்து அதிர்ச்சி ஆக்குகிறார்.

அதன் பிறகு பாட்டி அண்ணாமலை ஆகியோர் இந்த வெள்ளிக்கிழமை மீனாவுக்கு தாலி பிரித்து போட்டு அன்னைக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சொல்லி பேச விஜய் வழக்கம் போல இப்ப எதுக்கு இதெல்லாம் முதல்ல மனோஜ்க்கு நடக்க வேண்டியது எல்லாம் நடக்கட்டும் அதுக்கப்புறம் இவர்களுக்கு பண்ணலாம் என்று சொல்ல பாட்டி முதல்ல இவங்களுக்கு நடக்க வேண்டியது நடக்கணும் என சொல்லி விஜயாவை ஆஃப் பண்ணுகிறார்.

அதனைத் தொடர்ந்து மீனா சமைக்க விஜயாவை அரிசி எடுத்துக் கொடுக்க சொல்லி கேட்க அந்த பயம் இருக்கணும் என சொல்லி விஜயா அரிசி எடுத்துக் கொடுத்துவிட்டு உன் சொந்தக்காரங்க யாரையும் தாலி பிரித்து போடும் ஃபங்ஷனுக்கு வர சொல்ல கூடாது என கண்டிஷன் போட இதைக் கேட்டு விடும் நான் உங்க வீட்டுல போய் எல்லாரும் வர சொல்லிட்டேன் உன்கூட பூ கட்டுறவங்கள கூட கூப்பிட்டு விட்டேன் என்று சொல்லி விஜயாவுக்கு ஷாக் கொடுக்கிறார்.

அதன் பிறகு கிச்சனுக்கு வரும் முத்து நான் யாரையும் கூப்பிடல அம்மாகிட்ட அப்படி சும்மாதான் சொன்னேன், இது உனக்கான பங்க்ஷன் யாரை கூப்பிடனும் கூப்பிடக்கூடாதுன்னு நீ தான் முடிவு பண்ணனும் என்று அறிவுரை கூறுகிறார். அதோடு நான் சொன்ன எல்லாரையும் நீயே கூப்பிட்டு என்று சொல்ல மீனா அம்மாவை கூப்பிடும்போது நீங்களும் கூட வந்தா தானே மரியாதையா இருக்கும் என்று சொல்ல சரி அப்போ சாயங்காலம் துணி எடுக்க போகும்போது அப்படியே போய் கூப்பிட்டு வரலாம் என்று சொல்கிறார்.

நாளுக்கு நாள் முத்து நெருக்கமாகி கொண்டே வருவதால் மீனா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


sirakadikka-aasai-serial-episode-update
jothika lakshu

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

4 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

4 hours ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

4 hours ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

8 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

8 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

1 day ago