கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற திரைப்படம் ‘கோந்தல்’. அறிமுக இயக்குநர் சந்தோஷ் திவாகர் இயக்கியுள்ள இப்படத்தில் இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் நடைபெறும் ‘கோந்தல்’ எனப்படும் பாரம்பரிய சடங்கை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இது மகாராஷ்டிராவின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மற்றும் வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்.
திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘கோந்தல்’, பல விருதுகளையும் வென்றுள்ளது. குறிப்பாக 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான ‘சில்வர் பீகாக்’ விருதை சந்தோஷ் திவாகர் பெற்றார்.
இந்நிலையில், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ‘கோந்தல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இப்படம் ஆஸ்கர் போட்டிக்கு செல்கிறது.
மேலும், மராத்தி சினிமா வரலாற்றில் ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக தேர்வு செய்யப்படும் 4-வது திரைப்படம் என்ற பெருமையையும் ‘கோந்தல்’ பெற்றுள்ளது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…