sirakadikka-aasai serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயா ஸ்ருதி என் அம்மாவும் இந்த மாலை தான் போடணும் என வாக்குவாதம் செய்ய ஸ்ருதி இரண்டு மாலையும் போட்டு கொண்டு பிரச்சனையை தீர்த்து வைக்கிறார்.
வெளியே முத்து கண்டிப்பா ஒரு புயலே வீசும் என அண்ணாமலையின் கூப்பிட்டு நிற்க வைத்து அங்க பாருங்க ஒரு புயலே வரப்போகுது என ஆளோடு காத்திருக்க சுருதி இரண்டு மாலையும் போட்டுக் கொண்டு வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன இந்த பொண்ணு இப்படி பண்ணியாச்சு என்று சொல்ல இது வந்த விஜயா ஸ்ருதியை நினைத்து பெருமையா இருக்கு இந்த குணமெல்லாம் பெரிய வீட்டு பொண்ணுங்க கிட்ட தான் இருக்கும் என்று பேச அண்ணாமலை இதெல்லாம் மீனா கிட்டயும் இருக்கு என பேசி பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக வாசுதேவனும் அவரது மனைவியும் சேர்ந்து இரண்டு பேரை ரெடி பண்ணி முத்துவை கோபப்பட வைக்க சொல்லி அனுப்பி வைக்கின்றனர். முதலில் ஒருவர் வந்து முத்து பக்கத்தில் நின்று போன் பேசுவது போல பேசிக் கொண்டே ஷூ காலால் அவரது காலை போட்டு மிதிக்க வலி தாங்க முடியாமல் தவிக்கிறார் முத்து. சண்டை போடுவார் என எதிர்பார்த்தால் சாமியே சரணம் ஐயப்பா உங்க கால கொஞ்சம் எடுங்கப்பா என்று சமாதானம் பேசுகிறார்.
மீனா அவரிடம் சண்டைக்கு போக முத்து மீனாவையும் அமைதியாக இருக்க சொல்லி பிரச்சனை இல்லாமல் தீர்த்து வைக்கிறார். பிறகு ஸ்ருதியின் அம்மா அந்த ஆட்களிடம் கோபப்பட்டு திட்ட ட்ரு காலால் மிதிக்க ஸ்ருதி நம்ம கோபத்தில் கண்டபடி திட்ட உங்களை லேசா தான் மிதிச்சேன் ஆனா அவனை இதை விட ரொம்ப மோசமா மிதிச்சேன் அப்பயும் அவன் கோபப்படல. எனக்கு தெரிஞ்ச அவனு கோபப்பட வைக்கிறது ரொம்ப கஷ்டம் என சொல்கிறார்.
அடுத்து ரோகினி ஏற்பாடு பண்ண ஆள் இன்னும் காணும் என வித்யாவிடம் கேட்டுக் கொண்டிருக்க அப்போது உள்ளே வரும் விஜயா எங்கே உங்க அப்பா என கேட்டு கோபப்படுகிறார். ரோகினி வந்துட்டு இருக்காரு இன்னும் பிளைட்ல தான் இருக்காரு போல போன் நாட் ரீச்சபிள்ல தான் இருக்கு என சமாளிக்கிறார். குழந்தைக்கு சோறு ஊற்ற கதையை எவ்வளவு நேரத்துக்கு இதையே சொல்லிக்கிட்டு இருக்க போற என திட்டுகிறார்.
உங்க அப்பா வருவார்னு ஸ்ருதியோட அப்பா அம்மா கிட்ட சொல்லி இருக்கேன் அவங்களும் சொந்தக்காரங்க கிட்ட சொல்லி இருக்காங்க. அவர் வராமல் போய்ட்டா என்னுடைய மானம்தான் போகும் என ஆவேசப்படுகிறார். இந்த பிரச்சனை ஓய்ந்ததும் கழுத்தை பார்த்துவிட்டு என்ன நகையே இல்லாம இருக்க? ஸ்ருதிக்கு கழுத்துல நகை போடவே இடம் இல்ல. அவ்வளவு போட்டுக்கிட்டு இருக்கா என ஆவேசப்படுகிறார்.
சரி உங்க அப்பா வரவரைக்கும் இது நகையை போட்டுக்கிட்டு என்று தனது கழுத்தில் இருக்கும் நகையை கழட்டி போடுகிறார். அடுத்ததாக ரோகினி ஏற்பாடு செய்த நபர் மண்டபத்திற்கு வர வித்தியா முத்துவை காட்டு இவனுதான் நீ குடிக்க வைக்கணும் மத்தத நாங்க பார்த்துக்கிறோம் என சொல்கிறார்.
அதேபோல் மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா மீண்டும் முத்துவை வம்பு இழுக்க வேறொரு ஆளை அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…